ADDED : ஆக 18, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூரை சேர்ந்த, 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருடன் இடுவாய், 63 வேலம்பாளையத்தில் தங்கி, ஜே.சி.பி., ஆப்ரேட்டராக வேலை செய்து வரும் அருண்குமார், 24 என்பவர் பேசி பழகி வந்தார். சிறுமிக்கு திடீரெனஉடல் நலம் பிரச்னை ஏற்பட்டது.
சிறுமியை மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். பரிசோதனையில், சிறுமி, இரு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. புகாரின் பேரில், கொங்குநகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர்.
அதில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகிய அருண்குமார், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் கர்ப்பமானது தெரிந்தது. இதனால், அருண்குமாரை 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.