/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பகலிலும் ஒளிர்கிறது; இருளிலும் ஒளிரவில்லை
/
பகலிலும் ஒளிர்கிறது; இருளிலும் ஒளிரவில்லை
ADDED : ஆக 26, 2024 11:13 PM

1 விபத்து அபாயம்
அனுப்பர்பாளையம்புதுார் - வேலம்பாளையம் பிரதான ரோட்டில் சரியான முறையில் மூடப்படாத சாக்கடை கால்வாய் உள்ளது. இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
- வெற்றியரசு, திலகர் நகர்.
2 மின்கம்பம் இடையூறு
அவிநாசி, மங்கலம் ரோடு டீச்சர்ஸ் காலனியில் வீட்டு கேட் முன் மின்வாரியத்தினர் மின்கம்பத்தை நட்டு வைத்துள்ளனர். இடையூறாக உள்ளது.
- கவுதம், அவிநாசி.
3 பொதுமக்கள் சிரமம்
திருப்பூர், சூர்யா நகரில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில், ரோட்டின் இருபுறங்களில் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
- சுரேஷ், சூர்யா நகர்.
4 இருக்கைகள் சேதம்
திருப்பூர், நெருப்பெரிச்சலில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் அமரும் இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகிறது. மக்கள் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- செந்தில்குமார், நெருப்பெரிச்சல்.
5 பகலிலும் ஒளிர்கிறது
திருப்பூர், சூசையாபுரம் மெயின் ரோட்டில் உள்ள தெருவிளக்கு பகலிலும் அணையாமல், எரிந்து வருகிறது.
- சத்யன், சூசையாபுரம்.
6 இருள்சூழ் வீதி
திருப்பூர், சூசையாபுரத்தில் இரண்டாவது வீதியில் தெருவிளக்கு எரியவில்லை. மக்கள் சிரமப்படுகின்றனர்.
- வின்சென்ட் ராஜ், சூசையாபுரம்.
7 ஆபத்தான மின்கம்பம்
திருப்பூர், தாராபுரம் ரோடு, அரண்மனை புதுாரில் மின்கம்பம் அமைக்கப்பட்டு, இரண்டு வாரங்களே ஆன நிலையில், சரியாக அமைக்காத காரணத்தினால், சற்று சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
- இளங்கோ, அரண்மனை புதுார்.
11 வாகனங்கள் தாறுமாறு
திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள வடக்கு உழவர் சந்தையில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
- உமாசங்கர், எஸ்.வி., காலனி.
8 தண்ணீர் தேக்கம்
திருப்பூர், சாமுண்டிபுரம், எம்.ஜி.ஆர்., நகர் அமர்ஜோதி நகரில் கால்வாய் சரியில்லாத காரணமாக, ரோட்டில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
- மோகனசுந்தரம், சாமுண்டிபுரம்
9 குழாய் உடைப்பு
திருப்பூர் கண்ணகி நகர், 60 அடி ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாகியும், சரி செய்யப்படாமல் உள்ளது. மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் நேரத்தில், உடைந்த இடத்தில் குடிநீர் வீணாகி வருகிறது.
- ரஞ்சித், கண்ணகி நகர்.
10 திறந்த சாக்கடை
திருப்பூர், தாராபுரம் ரோடு, அரசு மருத்துவமனை அருகே திறந்த வெளியில் சாக்கடை உள்ளது. அதனை அடைக்க வேண்டும். குப்பைகளால் கழிவு நீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது.
- தர்மராஜன், தாராபுரம் ரோடு.

