/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோபுர கலசங்கள் கோவிலுக்கு உபயம்
/
கோபுர கலசங்கள் கோவிலுக்கு உபயம்
ADDED : ஆக 11, 2024 12:21 AM

திருப்பூர்;ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோபுரகலசங்கள் நேற்று பக்தர்கள் சார்பில் வழங்கப்பட்டது.
திருப்பூர், பெரியகடை வீதி பகுதியில் உள்ள ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா, 23ம் தேதி நடக்க உள்ளது. கோவிலில் திருப்பணி நடந்து முடிந்துள்ள நிலையில், பக்தர்கள் பல்வேறு உபயங்களை செய்துள்ளனர்.
ராஜகோபுரத்தின் ஐந்து பெரிய கலசம், பரிவார தெய்வ சன்னதிகளுக்கு, 10 கலசங்கள் என, 15 கலசங்களை, அங்கேரிபாளையத்தை சேர்ந்த தாமோதரன் என்ற பக்தர் உபயமாக வழங்கியுள்ளார்.
நேற்று நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் முன்னிலையில், கோவில் கமிட்டி தலைவர் வசந்தகுமார் வசம், கோபுர கலசங்கள் ஒப்படைக்கப்பட்டன.
மாநகராட்சி கவுன்சிலர் கண்ணப்பன், அ.தி.மு.க., நிர்வாகி மயூரநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

