/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மடத்துக்குளத்தில் புது தீயணைப்பு நிலையம் சுய வேலைவாய்ப்பு திட்டம் ரூ.49.70 கோடி கடனுதவி அரசு அறிவிப்புக்கு வரவேற்பு

ADDED : ஜூலை 01, 2024 12:37 AM

உடுமலை;மடத்துக்குளத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு, அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
உடுமலை தாலுகாவில் இருந்து, கடந்த, 2009ல், சில உள்வட்டங்கள் பிரிக்கப்பட்டு, மடத்துக்குளம் தாலுகா உருவாக்கப்பட்டது.
தாலுகா அலுவலகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள், மடத்துக்குளத்தில் ஏற்படுத்தப்பட்டாலும், தீயணைப்பு நிலையம் இல்லாதது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது.
நுாற்பாலைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில், தீயணைப்பு நிலையம் இல்லாததால், உடுமலையில் இருந்து வாகனம் சென்று, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடும் நிலை உள்ளது.
உடுமலை தீயணைப்பு நிலையத்தில், ஒரு வாகனம் மட்டுமே இருப்பதால், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டு வந்தது. எனவே, மடத்துக்குளத்தில் புதிதாக தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
கடந்த வாரம், மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் கிளம்பிய புகையால் நோயாளிகள் பாதித்தனர்; உடுமலையில் இருந்து தீயணைப்பு வாகனம் சென்று தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
எனவே, மடத்துக்குளத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்; மக்கள் பிரதிநிதிகளும் இப்பிரச்னை குறித்து அரசை வலியுறுத்த வேண்டும் என கடந்த, ஜூன் 24ல் செய்தி வெளியானது.
இந்நிலையில், நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில், மடத்துக்குளத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மடத்துக்குளம் தாலுகா மக்கள் வரவேற்றுள்ளனர்.
அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், உடனடியாக அப்பகுதியில் இடத்தேர்வு மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து, தீயணைப்பு நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.