/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அரசு நில ஆக்கிரமிப்பு அதிகரிப்பு'
/
'அரசு நில ஆக்கிரமிப்பு அதிகரிப்பு'
ADDED : ஜூன் 26, 2024 10:58 PM
பல்லடம் : பல்லடம் நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத் தலைவர் மணிக்குமார் அளித்த புகார்:
சில ஊராட்சிகளில், அரசியல் பிரமுகர்கள், வசதி படைத்தவர்கள் உள்ளிட்டோர், அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து போலி ஆவணங்கள் மூலம் பட்டா பெற முயற்சிக்கின்றனர். இதற்கு, வருவாய் துறை அதிகாரிகள் சிலரும் துணை போவதால், முறைகேடுகள் பகிரங்கமாக நடக்கின்றன.
இதுபோன்ற செயல்களால், அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, எத்தனையோ வீடேற்ற ஏழை எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிலங்கள் கிடைக்காமல் போகிறது. ஆண்டுதோறும் நடக்கும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் இலவச பட்டா கேட்டு வரும் மனுக்களை அதிகம் என்பதில் இருந்தே இது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
அரசு நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, வீடற்ற நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டு ஜமாபந்தியில் கொடுக்கப்பட்ட சில மனுக்களுக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் உள்ளது. எனவே, நிலுவையில் வைக்கப்பட்டுள்ள மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும்.
வருவாய் துறை அலுவலர்கள் மீது பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மையை போக்கும் விதமாக, மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உரிய உத்தரவை பிறப்பித்து, மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.