/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கராத்தே போட்டியில் அரசு பள்ளி மாணவர் அபாரம்
/
கராத்தே போட்டியில் அரசு பள்ளி மாணவர் அபாரம்
ADDED : ஜூலை 23, 2024 11:04 PM

அவிநாசி;கராத்தே போட்டியில் கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி மாணவர்கள் படைத்தனர்.
அவிநாசி அருகே கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி மாணவர்கள், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்றனர்.
அதில், வெவ்வேறு வயது கட்டா பிரிவில் விசித்ரா, சுபதர்ஷினி, சாதனா ஆகியோர் முதலிடம், ஸ்ரீவித்யா இரண்டாமிடம், சண்டை பிரிவில் ஸ்ரீவித்யா மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கருவலுார் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாரி, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், கருவலுார் பகுதி கராத்தே பயிற்சி ஆசிரியர் வடிவேல், உடற்கல்வி ஆசிரியர் மோகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.