/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலைத்திருவிழாவில் வெற்றியை வசமாக்கிய அரசுப்பள்ளி
/
கலைத்திருவிழாவில் வெற்றியை வசமாக்கிய அரசுப்பள்ளி
ADDED : மார் 07, 2025 12:06 AM

திருப்பூர்; அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் நோக்கில், மாநில அரசின் சார்பில், 'சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு' என்ற கருத்தை அடிப்படையாக வைத்து, கலைத்திருவிழா நடத்தப்பட்டது.
நம் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாத்து, அவற்றை முறையாக பராமரித்து, வருங்கால தலைமுறையினர் பயன்படுத்தும் வகையில், விட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, கல்வித்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது.
இதில், அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள், அதிகளவில் வெற்றி பெற்று, சாதனை படைத்தனர். செவ்வியல் இசையில் மாணவி சுவேதா, தனி நபர் நடிப்பில் சம்வர்த்திகா வெற்றி பெற்றனர்.
வில்லுப்பாட்டில் மாணவிகள் ஸ்ருதி, ேஹமா, கண்மணி, கலைச்செல்வி, சமீராபானு குழுவினர் வெற்றி பெற்றனர். கிராமிய நடனத்தில் பஹீமா பர்வீன், சாதனா, முத்துலட்சுமி, தஸ்வினா, சர்விகா, ஹரிப்பிரியா, பரினித்தா, மாணவர்கள் மாரீஸ்வரன், கலாம் ஆகியோர் கொண்ட குழுவினர் வெற்றி பெற்றனர்.
பரதநாட்டியத்தில் மாணவிகள் ஹரிணா, பிரியதர்ஷினி, காவியா, தனுஸ்ரீ, பிரகதி, பிரதிக்ஷா, ஹனுஷ்யாஸ்ரீ, சாருஹாசினி ஆகியோர் கொண்ட குழுவினர் வெற்றி பெற்றனர். பள்ளி தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் தலைமையில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.