ADDED : ஜூலை 12, 2024 11:39 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:லோக்சபா தேர்தல், வெயில் காரணமாக பள்ளி திறப்பில் தாமதம் உள்ளிட்டவற்றால், ஜூன் முதல் வாரத்துக்கு பதிலாக, ஜூன், 10 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.
இதனால், பள்ளிகளில் மொத்த (215 நாட்கள்) வேலை நாட்களை ஈடுசெய்ய, ஆண்டின், 20 சனிக்கிழமை பள்ளிகள் செயல்படுமென பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. கடந்த, ஜூன், 29 ம் தேதி சனிக்கிழமை அரசு பள்ளிகள் செயல்பட்டது. கடந்த வாரம் (ஜூலை 6ம் தேதி) பள்ளிகள் விடுமுறை விடப்பட்ட நிலையில், இன்று (ஜூலை 13ம் தேதி) இம்மாத கணக்கீட்டுக்காக அரசு துவக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என, மாவட்ட கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
