ADDED : ஆக 08, 2024 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், பி.என்., ரோடு, பாண்டியன் நகர் அருகே உள்ளது சவுடாம்பிகா நகர். அப்பகுதியில் உள்ள, விநாயகர் கோவில் வளாகத்தில், அரசு மற்றும் வேம்பு மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், ஆடிப்பூர விழாவின் போது, வேம்பு மற்றும் அரசு மரங்களுக்கு திருமணம் செய்து, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.ஆடிப்பூரத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, மரங்களுக்கு திருமண விழா நடந்தது.
பட்டுச்சேலை, பட்டுவேட்டி கட்டி, மாலைகள் அணிவித்து, மங்கல வாழ்த்து பாடலுடன் திருமண விழா நடத்தப்பட்டது. 'மழை வளம் வேண்டியும், உலகில் அமைதி தழைக்க வேண்டியும், ஆண்டுதோறும் இவ்வாறு அரசு - வேம்பு மரங்களுக்கு திருமணம் நடத்தப்படுகிறது,' என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.