/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கேரம் போட்டியில் அரசு கல்லுாரி அபாரம்
/
கேரம் போட்டியில் அரசு கல்லுாரி அபாரம்
ADDED : செப் 13, 2024 11:56 PM

திருப்பூர் : முதல்வர் கோப்பைக்கான கல்லுாரி மாணவியர், பொதுப் பிரிவினருக்கான கேரம் போட்டி, எஸ்.டி.ஏ.டி., உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. போட்டிகளை திருப்பூர் மாவட்ட கேரம் அசோசியேஷன் தலைவர் சிவக்குமார் துவக்கி வைத்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆர்வமுடன் கேரம் வீரர்கள் பங்கேற்றனர்.
வெற்றி பெற்றவர்கள் விவரம்: கல்லுாரி மாணவியருக்கான கேரம், இரட்டையர் பிரிவு போட்டியில், உடுமலை அரசு கலைக்கல்லுாரி மாணவியர் பிரபா, கோகுலவாணி முதலிடம், தாராபுரம், பிஷப்தார்ப் கல்லுாரி மாணவியர் சசிபிரியா, யாமினி, இரண்டாமிடம், உடுமலை, கால்நடை மருத்துவ ஆராய்ச்சி பல்கலை மற்றும் கல்லுாரி மாணவியர் சஞ்சனா, சவுமியா மூன்றாமிடம். ஆண்கள் பொதுப்பிரிவில் முதலிடம் விக்னேஷ்குமார் (திருப்பூர்), இரண்டாமிடம் இம்மானுவேல்ராஜ் (அவிநாசி), மூன்றாமிடம் ராகவன் (தாராபுரம்).