/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுாலிழையில் 'சென்டம்' நழுவ விட்ட அரசு பள்ளிகள்
/
நுாலிழையில் 'சென்டம்' நழுவ விட்ட அரசு பள்ளிகள்
ADDED : மே 06, 2024 11:25 PM
திருப்பூர்:மாவட்டத்தில், 68 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. இவற்றில், 16 பள்ளிகள் 'சென்டம் ரிசல்ட்' வாங்கி அசத்தியுள்ளது. குறிப்பிட்ட சில பள்ளிகள் ஒன்று அல்லது இரண்டு மாணவர் அல்லது மாணவி தேர்ச்சி பெறாததால், நுாறு சதவீதம் பெற முடியாமல் போனது.
இது குறித்த விவரம் வருமாறு
உடுமலை, ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 155 மாணவியர் தேர்வெழுதினர். ஒரு மாணவி மட்டும் தேர்ச்சி பெறாததால், இப்பள்ளி, 99.35 சதவீதம் பெற்றது.
n பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில், தேர்வெழுதிய, 66 மாணவியரும் தேர்ச்சி பெற்று விட்டனர். 82 மாணவர்களில் ஒருவர் தேர்ச்சி பெறவில்லை; தேர்ச்சி சதவீதம், 99.33.
n கேத்தனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 61 மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். 62 மாணவரில், ஒருவர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 99.19.
n பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 72 மாணவியரும் தேர்ச்சியடைந்தனர். 52 ல் ஒரு மாணவர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 99.19.
n குமரலிங்கம் பள்ளியில், 51 மாணவியரும் தேர்ச்சி பெற்றனர்; 36 மாணவரில், ஒருவர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 98.85.
n நத்தக்காடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 44 மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 38 மாணவர்களில், ஒருவர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 98.78.
n கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 61 மாணவர் தேர்வெழுதி, இருவர் தேர்ச்சி பெறவில்லை. 59 பேர் தேர்ச்சி. 75 மாணவியர்களில், 75 பேரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம், 98.53.
n பூளவாடி பள்ளியில் 50 மாணவியர் தேர்வெழுதி, அனைவரும் தேர்ச்சி. 22 மாணவர்களில் இருவர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 97.22.
n வெள்ளிரவெளி பள்ளியில், 25 மாணவியரும் தேர்ச்சி. 23 மாணவரில், இருவர் தேர்ச்சியடையவில்லை. தேர்ச்சி சதவீதம், 95.83.
n உடுக்கம்பாளையம் பள்ளியில், 18 மாணவியரும் தேர்ச்சி. 25 மாணவரில், 23 பேர் தேர்ச்சி. இருவர் தேர்ச்சி இல்லை. தேர்ச்சி சதவீதம், 95.35.
n எலையமுத்துார் பள்ளியில், தேர்வெழுதிய, 39 மாணவியரும் தேர்ச்சி. 45 மாணவரில் நான்கு பேர் தேர்ச்சியடைவில்லை. தேர்ச்சி சதவீதம், 95.24.
n வி.கள்ளிபாளையம் பள்ளியில், 39 மாணவியரும் தேர்ச்சி. 39 மாணவரில், நான்கு பேர் தேர்ச்சி இல்லை. தேர்ச்சி சதவீதம், 94.87.
n உடுமலை, ராஜேந்திரா ரோடு, அரசு பள்ளி மாணவியர், ஆறு பேர் தேர்ச்சி. 20 மாணவர்களில், 18 பேர் தேர்ச்சி; இருவர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 92.32.
n படியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தேர்வெழுதிய, 51 மாணவியரும் தேர்ச்சி பெற்று விட்டனர். 58 மாணவர்களில், இருவர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 98.17.
மாணவர் 'டாப்'
n சாமிக்கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 33 மாணவர் தேர்வெழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்றனர். 41 மாணவியரில் ஒருவர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 98.65. குடிமங்கலம் பள்ளியில், 42 மாணவர் தேர்வெழுதி, 42 பேர் தேர்ச்சி பெற்றனர். 68 மாணவியரில், இருவர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 98.18.
n கருவலுார், 74 மாணவர் தேர்வெழுதி, அனைவரும் தேர்ச்சி. 69 மாணவியரில், மூவர் தேர்ச்சியடையவில்லை. தேர்ச்சி சதவீதம், 97.90.
n ராமச்சந்திராபுரம் தேர்வெழுதிய, 15 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி, 27 மாணவியரில் ஒருவர் மட்டும் தேர்ச்சியடையவில்லை. தேர்ச்சி சதவீம், 97.62.
n பூலாங்கிணறு பள்ளியில் தேர்வெழுதிய, ஏழு மாணவரும் தேர்ச்சி, 14 மாணவியரில் ஒருவர் தேர்ச்சியடையவில்லை. தேர்ச்சி சதவீதம் 95.24.