/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கலை கல்லுாரியில் இன்று பட்டமளிப்பு விழா
/
அரசு கலை கல்லுாரியில் இன்று பட்டமளிப்பு விழா
ADDED : மே 02, 2024 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது.
உடுமலை அருகே எலையமுத்துார் ரோட்டில் அரசு கலைக்கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரியில் 2022-23 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கான, 49வது பட்டமளிப்பு விழா இன்று (3ம் தேதி) காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.
கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகிக்கிறார். கோவை மண்டலம் கல்லுாரி கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வி மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார்.
நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.