நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹார்ட்புல்னெஸ் அமைப்பு சார்பில் யோகா சனம், எளிய மூச்சுப் பயிற்சி, தியானப் பயிற்சி ஆகியவற்றை கற்றுக் கொள்ளும் வகையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
பயிற்சி முகாம், பொங்கலுார் அடுத்த மாதப்பூர் கிராமத்தில் துவங்கியது. ஊராட்சி தலைவர் அசோக்குமார் துவக்கி வைத்தார். துணை தலைவர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.ஆதிவிநாயகர் கோவில் நிர்வாகிகள், ஹார்ட்புல்னெஸ் ஒருங்கிணைப்பாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மூன்று நாள் பயிற்சி முகாம் இன்றுடன் நிறைவடைகிறது.