/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீயால் அழியும் புல்வெளி; விவசாயிகள் விரக்தி
/
தீயால் அழியும் புல்வெளி; விவசாயிகள் விரக்தி
ADDED : மார் 07, 2025 03:26 AM

பொங்கலுார்; சில மாதங்களாக மழை இல்லாமல், வறண்ட வானிலை நிலவுகிறது. கோடை வெயில் கொளுத்த துவங்கி விட்டதால் மேய்ச்சல் நிலங்களில் உள்ள புற்கள் காய்ந்து கிடக்கின்றன.
பசுந்தீவனம் கிடைக்காமல் மேய்ச்சல் நிலங்களில் உள்ள வறண்ட புற்களையே கால்நடைகள் சாப்பிட்டு வருகின்றன. மேய்ச்சல் நிலங்களில் மது அருந்தும் 'குடி'மகன்கள், சமூக விரோதிகள் உள்ளிட்டோர் அவ்வப்போது, புற்களுக்கு தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் புல்வெளிகள், மரங்கள், உயிர் வேலிகள் தீயில் கருகி வருகின்றன. இவ்வாறு மாவட்டத்தின் பல பகுதிகளில் இது ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்ச்சியாகவே மாறி வருகிறது. இப்படி தீப்பற்றி எரிவதால் அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சொத்துக்களுக்கு தீ பரவி பெரும் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கால்நடைகள் சாப்பிட்டு வந்த வறண்ட புற்களும் கருகி விடுவதால் கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.