/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறைகேட்பு முகாம்:காலத்தின் தேவை
/
குறைகேட்பு முகாம்:காலத்தின் தேவை
ADDED : ஜூலை 07, 2024 11:09 PM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், ஆறு லட்சத்துக்கும் அதிகமான பனியன் தொழிலாளர்கள் உள்ளனர். வெளிமாநிலங்களை சேர்ந்த, இரண்டு லட்சம் தொழிலாளர்கள், திருப்பூரை சார்ந்து பணியாற்றி வருகின்றனர். பனியன் தொழிலாளர் வாயிலாக, இ.எஸ்.ஐ., - பி.எப்., திட்டங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது. திருப்பூரில் பி.எப்., உதவி கமிஷனர் அலுவலகம் திறந்த பிறகும், கோவை மாவட்டத்தையே மீண்டும் சார்ந்து இயங்க வேண்டியுள்ளது. இ.எஸ்.ஐ., திட்டத்தில் மருத்துவ பணப்பலன்கள் பெறுவது; பி.எப்., திட்டத்தில் கணக்கு மாற்றம் செய்வது; புதிய கணக்கு துவக்குவது; கணக்கில் இருந்து தங்கள் பங்கு தொகையை பெறுவது என, ஒவ்வொரு பணியிலும் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதோடு குளறுபடிகளும் நிகழ்கின்றன. தொழிலாளர்களுக்கு திட்டத்தில் உள்ள 'டிஜிட்டல்' சேவைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை.
ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுசெயலாளர் சேகர் கூறுகையில்,''இதற்கென திருப்பூர் மாவட்ட நிர்வாகம், குறைகேட்பு முகாம் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.