/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடத்தில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்
/
பல்லடத்தில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்
ADDED : ஆக 30, 2024 11:20 PM
திருப்பூர்:காங்கயம், பல்லடம் பகுதிகளை மையமாக கொண்டு, நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நீர்வளத்துறை சார்பில், காங்கயம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சிவன்மலை, படியூர், கீரனுார், கணபதிபாளையம், பாலசமுத்திரம்புதுார் மற்றும் தம்மரெட்டிபாளையம் ஆகிய கிராம ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகளுக்குகீழ் பவானி பாசன பகுதியின் கசிவுநீரை, நீரேற்று முறையில் கொண்டு சென்று, நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், பல்லடம் சட்டசபை தொகுதி இச்சிப்பட்டி, கோடாங்கிபாளையம், அய்யம்பாளையம் ஆகிய கிராம ஊராட்சிகளில், குளம், குட்டைகளுக்கு சாமளாபுரத்தில் உறைகிணறு அமைத்து, நீரேற்று முறையில் நீரை கொண்டு சென்று, 12 குளம், குட்டைகளில் நிரப்பி, நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்நிறைவேற்றப்பட இருக்கிறது.
இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து அரசுத்துறை அலுவலர்களிடையே நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அமைச்சர் சாமிநாதன் தலைமையில், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் இக்கூட்டம் நடத்தப்பட்டது.