/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டு பாலியல் அத்துமீறல் 8 பேர் 'குண்டாசில்' கைது
/
கூட்டு பாலியல் அத்துமீறல் 8 பேர் 'குண்டாசில்' கைது
கூட்டு பாலியல் அத்துமீறல் 8 பேர் 'குண்டாசில்' கைது
கூட்டு பாலியல் அத்துமீறல் 8 பேர் 'குண்டாசில்' கைது
ADDED : மே 05, 2024 12:45 AM

திருப்பூர்,:திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் வீரக்குமாரசுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடந்த தேர்த்திருவிழாவின் போது இசைகச்சேரி நடந்தது.
இதைப்பார்க்க, 17 வயது கல்லுாரி மாணவி தன் தாயுடன் சென்றார்.
கூட்டத்தில், மாணவி திடீரென மாயமானார். வெள்ளக்கோவில் போலீசார் தேடினர். மறுநாள் காலை மாணவி வீட்டுக்கு வந்தார்.
அங்கு வந்த சிலர், தன்னை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்தார். மாணவி புகாரில், காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார், 8 பேரை கைது செய்தனர்.
இச்சூழலில், கூட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மணிகண்டன், 29, பிரபாகர், 32, தினேஷ், 27, பாலசுப்ரமணி, 30, நவீனகுமார், 26, மோகன்குமார், 28, நந்தகுமார், 30 மற்றும் தமிழ்செல்வன், 28 எட்டு பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் எஸ்.பி., அபிஷேக் குப்தா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் உத்தரவின் பேரில், எட்டு பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.