/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காய்கறிக்கு மாற்றாக கொய்யா சாகுபடி
/
காய்கறிக்கு மாற்றாக கொய்யா சாகுபடி
ADDED : மார் 14, 2025 10:32 PM
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, பல ஆயிரம் ஏக்கரில், காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, மழைப்பொழிவு குறைவு உட்பட காரணங்களால், நிலத்தடி நீர் மட்டம் சரிந்து, காய்கறி சாகுபடிக்கு கூட தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், குறைந்த தண்ணீர் தேவை உள்ள, கொய்யா உட்பட சாகுபடிகளை மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டத்துவங்கியுள்ளனர்.
ஏக்கருக்கு, 100 நாற்றுகள் வரை, நடவு செய்கின்றனர். சொட்டு நீர் பாசன முறையில், வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.
கொய்யா பழங்களை உள்ளூரிலேயே எளிதாக விற்பனை செய்ய முடிவதால், நிலையான வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.