ADDED : மார் 06, 2025 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; மதுரை மாவட்டம், பேரையூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் அனுப்பர்பாளையத்தில் தங்கி அவிநாசி நகரில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகின்றனர்.
கடந்த பிப்., 22ம் தேதி அதே பகுதியை சேர்ந்த ஜெயமுருகன், 19, விக்னேஸ்வரன், 23 ஆதி, 22 மற்றும் கருப்பையா, 23 ஆகியோர் பேக்கரிக்கு வந்து பொருட்கள் வாங்கினர். பணம் கொடுக்காமல் வாக்குவாதம் செய்து, தாக்கினர். இதுதொடர்பாக நான்கு பேரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
கருப்பையா என்பவர் தொடர்ந்து மக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த காரணத்தால், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.