ADDED : ஆக 01, 2024 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:பொள்ளாச்சியில் இருந்து திருப்பூருக்கு சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 552 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், மங்கலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பல்லடம் ரோடு - இச்சிப்பட்டி சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், பொள்ளாச்சியில் இருந்து, குட்காவை கடத்தி சென்றது தெரியவந்தது. பாலக்காட்டை சேர்ந்த சுதீன்குமார், 27, நெகமத்தை சேர்ந்த அய்யாசாமி, 33, பொள்ளாச்சியை சேர்ந்த தங்கவேல், 59 ஆகிய மூவரும் தேவராயன்பாளையத்தில் உள்ள சுதீன்குமார் வீட்டுக்கு கொண்டுசென்று 552 கிலோ குட்காவை பதுக்கி வைக்க சென்றது தெரியவந்தது. மூவரும் கைது செய்யப்பட்டனர்.