/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பஸ்சில் அரை டிக்கெட் குழப்பம் பயணியர் - கண்டக்டர் வாக்குவாதம்
/
அரசு பஸ்சில் அரை டிக்கெட் குழப்பம் பயணியர் - கண்டக்டர் வாக்குவாதம்
அரசு பஸ்சில் அரை டிக்கெட் குழப்பம் பயணியர் - கண்டக்டர் வாக்குவாதம்
அரசு பஸ்சில் அரை டிக்கெட் குழப்பம் பயணியர் - கண்டக்டர் வாக்குவாதம்
ADDED : மே 29, 2024 01:38 AM
திருப்பூர்:'அரசு பஸ்களில், 12 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியருக்கு அரைக்கட்டணம் அனுமதிக்கலாம்' என அரசு சலுகை வழங்கியுள்ள நிலையில், உயரத்தை காரணம் காட்டி, முழு கட்டணம் வசூலிக்கின்றனர்.
இதனால் கண்டக்டர் மற்றும் பயணியர் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.தமிழக அரசு பஸ்களில், 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு அரை கட்டணம் வசூலித்தால் போதும்' என, அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.
ஆனால், பல பஸ்களில் 12 வயதுக்கு உட்பட்டு இருப்பினும், 130 செ.மீ., உயரத்துக்கு மேல் குழந்தைகள் வளர்ந்திருந்தால், முழு கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்க வேண்டும் என கண்டக்டர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.
இதனால் பல இடங்களில் பயணியர் கண்டக்டர் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
இது குறித்து, பயணிகள் சிலர் கூறுகையில், '12 வயது பூர்த்தி அடையாவிட்டாலும், குழந்தைகள், 130 செ.மீ., உயரம் வளர்ந்திருந்தால், முழுக்கட்டணம் செலுத்த வேண்டும் என கண்டக்டர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.
இந்த விவகாரத்தில் அரசு தெளிவான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றனர்.
கண்டக்டர்களோ, '12 வயது நிரம்பியவர்களாக இருந்தாலும், 130 செ.மீ., உயரத்துக்கும் மேல் வளர்ந்திருந்தால், முழுக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அறிவுறுத்தி உள்ளது. அதைத்தான் பின்பற்றுகிறோம்,' என்கின்றனர்.