/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
8-ம் வகுப்பு தனித்தேர்வருக்கு நாளை ஹால் டிக்கெட்
/
8-ம் வகுப்பு தனித்தேர்வருக்கு நாளை ஹால் டிக்கெட்
ADDED : ஆக 11, 2024 12:33 AM
திருப்பூர்;தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத உள்ளவர்கள், இணையதளம் மூலம் நாளை (12ம் தேதி) ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு, தேர்வெழுத உள்ளவர்கள் தேர்வுத்துறையின் சேவை மையம் அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆக., 12 ம் தேதி மாலை, 4:00 மணி முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளத்தில் HALL TICKET என்ற வாசகத்தை கிளிக் செய்து, ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்; விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்வது அவசியம்.
தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு, பொதுத்தேர்வு ஆக., 19 முதல், 23 ம் தேதி வரை நடக்கவுள்ளது. ஹால்டிக்கெட் இல்லாதவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே, கட்டாயம் ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.