ADDED : ஆக 09, 2024 02:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுல்தான்பேட்டை ஒன்றியம், வதம்பச்சேரி, பாவடி அம்மன் கோவில் மைதானத்தில், பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில், கைத்தறி தின விழா கொண்டாடப்பட்டது.
நிர்வாகி சந்திரசேகர் தலைமை வகித்தார். செயலாளர் நடராஜன் வரவேற்றார். நிர்வாகிகள் லோகநாதன், முருகேசன், பாரதிய தமிழக கைத்தறி பேரவை பொதுச் செயலாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெயின்போ ரோட்டரி சங்க தலைவர் மூவேந்தன், செயலாளர் கதிரேசன், ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.