sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கணவனை இழந்த கைத்தறி நெசவு தொழிலாளி: உதவி தொகைக்கு 3 ஆண்டாக காத்திருக்கும் அவலம்!

/

கணவனை இழந்த கைத்தறி நெசவு தொழிலாளி: உதவி தொகைக்கு 3 ஆண்டாக காத்திருக்கும் அவலம்!

கணவனை இழந்த கைத்தறி நெசவு தொழிலாளி: உதவி தொகைக்கு 3 ஆண்டாக காத்திருக்கும் அவலம்!

கணவனை இழந்த கைத்தறி நெசவு தொழிலாளி: உதவி தொகைக்கு 3 ஆண்டாக காத்திருக்கும் அவலம்!


ADDED : ஜூலை 07, 2024 01:50 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்;பல்லடம் அருகே, கணவனை இழந்த கைத்தறி நெசவாளி பெண் ஒருவர், கடந்த மூன்று ஆண்டுகளாகியும் உதவித்தொகை கிடைக்காமல் பரிதவித்து வருகிறார்.

கோவை மாவட்டம், சூலுார் தாலுகா, பெரிய வதம்பச்சேரியை சேர்ந்தவர் துளசிராஜன்; கைத்தறி நெசவாளி. மனைவி கனகுமணி, 34. மகன் சஞ்சீவ்குமார், 15 மற்றும் மகள் தர்ஷனா, 11. துளசிராஜன், 2019ல் வாகன விபத்தில் உயிரிழந்தார்.

இதனால், தனது கணவர் செய்து வந்த கைத்தறி நெசவுத் தொழிலை கனகுமணி செய்து கொண்டு, குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், உதவித்தொகை கேட்டு கல்வித் துறைக்கு விண்ணப்பித்தார். இதனால், 75 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால், உத்தரவு கடிதம் மட்டுமே கிடைத்த நிலையில், மூன்று ஆண்டுகளாகியும் உதவித்தொகை கிடைக்கவில்லை.

இது குறித்து கனகுமணி கூறியதாவது:

நெசவு செய்தால், வாரம், 2 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதனை கெண்டு குழந்தைகளை படிக்க வைத்து, குடும்பமும் நடத்தி வருகிறேன். கல்வி உதவி தொகை கிடைத்தால் குழந்தைகளை படிக்க வைக்க பேருதவியாக இருக்கும். உதவி தொகை தொடர்பாக, கல்வித்துறை அதிகாரிகளை கேட்டால், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கூட ஆகலாம் என்கின்றனர். உத்தரவு கடிதம் கிடைத்த பின்னும் உதவித்தொகை வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, 'பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கூறினர். இதனால், பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் செந்தில்குமாரிடம் கேட்டதற்கு, 'மாவட்ட நிர்வாக அலுவலகத்தில்தான் கேட்க வேண்டும்,' என்றார்.

கல்வி தொகை வழங்க உத்தரவு கடிதம் வழங்கப்பட்ட பின்னும், அதிகாரிகள் சரியான பதில் கூறாமலும், உரிய நடவடிக்கை எடுக்காமலும் இழுத்தடித்து வருவது, அதிகாரிகளின் அலட்சியத்தையே காட்டுகிறது.

எனவே, கோவை மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு, ஆதரவின்றி தவித்து வரும் கனகுமணிக்கு கல்வி உதவித்தொகை கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us