ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வாய்க்கால் தோட்டம், பல்லடம் ரோடு, திருப்பூர். விநாயகர் வழிபாடு, நான்காம் கால யாக பூஜை துவக்கம் - அதிகாலை 5:00 மணி. காஞ்சி காமாட்சி அம்மன் நுாதன தங்க விமானம் மகா கும்பாபிேஷகம் - காலை 7:45 முதல், 8:00 மணிக்குள். பரிவாரமூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் - காலை 8:15 மணி. மகா அபிேஷகம் - 11:30 மணி. பல்லடம் ரோடு, ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் அன்னதானம் - காலை 9:00 மணி முதல். சிறப்பு இசை நிகழ்ச்சி, கலைநிகழ்ச்சி - மாலை 6:00 மணி.
* ஸ்ரீ மகாலட்சுமி கோவில், மூலக்குரும்பபாளையம், சேவூர், அவிநாசி. இரண்டாம் கால யாக பூஜை, நாடிசந்தானம், பூர்ணாகுதி, கலசம் புறப்பாடு - காலை 7:00 மணி. கோபுர கலசம், ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிக்கு மகா கும்பாபிேஷகம், மகா அபிேஷகம், மகா தீபராதனை, தச தரிசனம் - காலை 9:00 மணி. அன்னதானம் - காலை 9:00 மணி.
* ஸ்ரீமகா கணபதி, ஸ்ரீமாகாளியம்மன், ஸ்ரீஜலகண்டம்மன், ஸ்ரீகருப்பராயன், ஸ்ரீகன்னிமார் கோவில், பள்ளிபாளையம், பொங்குபாளையம், திருப்பூர். நான்காம் கால யாக பூஜை - அதிகாலை 5:00 மணி. கும்பாபிேஷகம் - காலை 7:30 முதல், 9:00 மணி வரை. கொங்கு மஞ்சுநாதன் தலைமையில், பட்டிமன்றம் - இரவு 8:00 மணி.
* ஸ்ரீ தங்க மாரியம்மன் கோவில், எஸ். மேட்டுப்பாளையம், அவிநாசி. அவிநாசி பெரிய கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் - காலை 6:00 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவில், அவிநாசிலிங்கம்பாளையம், அவிநாசி. கிராம சாந்தி - இரவு 9:00 மணி.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி
ஸ்ரீ அண்ணமார் சுவாமிகளின் சரித்திர உடுக்கைப் பாடல் நிகழ்ச்சி, விக்ரம சோழீஸ்வரர் கோவில் வளாகம், கண்ணபுரம், காங்கயம். இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை.
மண்டல பூஜை
ஐயப்ப சுவாமி, ஸ்ரீ கிருஷ்ணன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். மதியம் 12:00 மணி.
பொது
துவக்க விழா
எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ் அண்ட் கேக்ஸ் புதிய கிளை திறப்பு விழா, குமார விநாயகர் கோவில் அருகில், குமார்நகர், திருப்பூர். காலை 8:30 முதல் 9:30 மணி வரை.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பசுமை சந்திப்பு, நுால் அறிமுகம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கவுசிகா நதிக்கரை, திருப்பூர். பங்கேற்பு: சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம். மாலை 4:00 மணி.
பயிற்சி வகுப்பு
தேவார, திருவாசக, திருப்புகழ் இசைப்பயிற்சி, நீதிநெறி வகுப்பு, சேக்கிழார் அரங்கம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: திருப்பூர் சைவ சித்தாந்த சபை. காலை, 11:00 முதல் மதியம், 12:30 மணி வரை.
ரத்ததான முகாம்
திருப்பூர் சென்டரல் லயன்ஸ் கிளப் பார்மஸி, காந்தி நகர், திருப்பூர். ஏற்பாடு: முயற்சி மக்கள் அமைப்பு. காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.
கண் பரிசோதனை முகாம்
இலவச சர்க்கரை, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை முகாம், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், பூச்சக்காடு, திருப்பூர். காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை.
வெற்றி விழாகொண்டாட்டம்
பிரதமராக மோடி மூன்றாவது முறை பதவி யேற்பு, வெற்றி விழா கொண்டாட்டம், சூளை பஸ் ஸ்டாப், அவிநாசி. மாலை 4:30 மணி. சிந்தாணி பஸ் ஸ்டாப் - மாலை 5:20 மணி. தாலுகா பஸ் ஸ்டாப் - மாலை 5:40 மணி. சக்திநகர் பிரிவு மாலை 6:30 மணி. ஏற்பாடு: அவிநாசி நகர பா.ஜ.,
திறன் மேம்பாட்டு போட்டி
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான திறன் மேம்பாட்டு போட்டி, புனித அமல அன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வெள்ள கோவில். ஏற்பாடு: மகாத்மா காந்தி மன்ற அறக்கட்டளை, வெள்ளகோவில் புத்தக திருவிழா 2024. காலை 10:00 மணி.
பொதுக்கூட்டம்
சீரணம்பாளையம் பழனிச்சாமி நினைவஞ்சலி பொதுக்கூட்டம், மா.கம்யூ., அலுவலகம், சீராணம்பாளையம், திருப்பூர். மாலை 5:00 மணி.
பாகுபலி பொருட்காட்சி
பத்மினி கார்டன், காங்கயம் ரோடு திருப்பூர். மாலை 4:30 மணி முதல்.
விளையாட்டு
தேர்வு போட்டி
மாவட்ட ேஹண்ட்பால் சீனியர் அணிக்கான தேர்வு போட்டி, பில்டர்ஸ் பொறியியல் கல்லுாரி, நத்தக்காடையூர், காங்கயம். ஏற்பாடு: மாவட்ட ேஹண்ட்பால் அசோசியேஷன். காலை, 9:00 மணி.