/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மருத்துவ வசதி உண்டு; மருத்துவர் இல்லை
/
மருத்துவ வசதி உண்டு; மருத்துவர் இல்லை
ADDED : மே 13, 2024 12:15 AM

அனுப்பர்பாளையம்;நெருப்பெரிச்சல், ஜி.எம்., கார்டனில் மாநகராட்சி சார்பில், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இங்கு அனைத்து வகை பரிசோதனை வசதிகள் மற்றும் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வசதிகளும் உள்ளன.
ஆரம்ப சுகாதார நிலையத்தில், பணியாற்றி வந்த மருத்துவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வேறு இடம் மாற்றப்பட்டார்.
வேறு மருத்துவர் நியமிக்கப்படவில்லை. இதனால் மருத்துவர் இல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
மருத்துவர் இல்லாததால், செவிலியர்கள் மருந்து, மாத்திரை கொடுத்து வருகின்றனர்.
மருத்துவர் பரிசோதனை வேண்டும் என்பவர்கள் தொலைவில் உள்ள பெருமாநல்லுார் அல்லது திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.