/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெஞ்சில் அவனே... என்றும் சிவனே!
/
நெஞ்சில் அவனே... என்றும் சிவனே!
ADDED : ஏப் 23, 2024 02:36 AM

கொங்கெழு சிவாலயங்களில் முதன்மையான அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேர்த்திருவிழாவில், பெரிய தேரோட்டம், நேற்று இரண்டாவது நாளாக கோலாகலமாக நடந்தது. இதயங்களில் இருந்து 'ஓம் நமசிவாய' கோஷம் பீறிட, ஆன்மிக லயம் பொங்க, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பாதங்களை வெயில் பதம் பார்த்தாலும், பக்தி செறிந்த மனங்களில், லிங்கேஸ்வரனே நிறைந்தருளினான். இரண்டாவது நாள் தேரோட்ட காட்சிகள், இதோ:
தேர் இழுக்க பயன்படுத்தப்படும் புல்டோசருக்கு பலகை போட்ட இளவட்டங்கள்.
ஊர் கூடி தேர் இழுப்போம்.
உடுக்கையடியும், சங்கொலியும் கலந்தால் உள்ளத்தில் தோன்றுவாய் இறைவா!
பெரிய தேர் நிலை சேர்ந்ததும் 'அரோகரா... ஓம் நமசிவாயா' என பக்தர்கள் எழுப்பிய கோஷம் விண்ணை முட்டியது.
ஆடி அசையும் தேரு... பாரு கண்ணு... பிள்ளைக்குக் காட்டும் தகப்பன் 'சாமி'.
சுட்டெரிக்கும் வெயிலிலும் தோளில் சாய்ந்தால் சுகம் அல்லவா!
தேரை நிலைநிறுத்துவதற்காக சன்னை போடும் இளைஞர்கள்.
பாதுகாப்புப்பணியில் போலீசார்.
இளைஞர்களின் ஆனந்தத் துள்ளல்.

