/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நதிக்கரையோரம் கட்டடக்கழிவு குவியல் சுற்றுச்சூழலுக்கு அபாயம்
/
நதிக்கரையோரம் கட்டடக்கழிவு குவியல் சுற்றுச்சூழலுக்கு அபாயம்
நதிக்கரையோரம் கட்டடக்கழிவு குவியல் சுற்றுச்சூழலுக்கு அபாயம்
நதிக்கரையோரம் கட்டடக்கழிவு குவியல் சுற்றுச்சூழலுக்கு அபாயம்
ADDED : ஜூன் 08, 2024 01:05 AM

திருப்பூர்;திருப்பூரில் நொய்யல் உள்ளிட்ட நதிக்கரையோரமும், நீர்நிலையையொட்டியும் கட்டடக்கழிவுகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் சீர்கெடுவதுடன், நீராதாரங்கள் மாயமாகும் அபாயமும் எழுந்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு குப்பை, கழிவுகள் போன்றே கட்டட கழிவுகளும் மாசை ஏற்படுத்துகின்றன. திருப்பூர் நொய்யல் நதிக்கரையில், பெருமளவில் கட்டட கழிவுகள் கொட்டப்படுகின்றன.
சிமென்ட், செங்கல், கம்பி, கற்கள், மரம், பிளாஸ்டிக், மற்றும் இரும்புக் குழாய் போன்ற கட்டுமானப் பொருள் சார்ந்த கட்டட கழிவுகள், நொய்யல் மட்டுமின்றி, கவுசிகா உள்ளிட்ட நதிக்கரையோரங்களிலும் கொட்டப்படுகின்றன.
'கட்டட கழிவுகளால் பல நீராதாரங்கள் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில், கட்டட கழிவுகளை மேலாண்மை செய்வது அவசியம் என்ற யோசனையையும் முன் வைத்திருக்கின்றனர்.
கட்டட கழிவுகளை மறு சுழற்சி வாயிலாக புதிய கட்டுமானங்களில் அவற்றை பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பம் இன்றைக்கு பெருகியுள்ளன. இந்திய தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், இத்தொழில் நுட்பங்களை, தங்கள் கட்டுமானங்களில் பயன்படுத்தி கொள்ள, இந்தியக் கட்டுமான நிறுவனங்கள் தயங்குகின்றன. இடிபாடுகளால் உண்டாகும் கழிவிலிருந்து மறு பயன்பாடு, மறு பயனீட்டை கட்டுமானங்களுக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
திடக்கழிவை கட்டுப்படுத்துவதற்கும் மறு பயன்பாடு, மறு பயனீடு செய்வதற்கும் வரி சலுகை வழங்கப்பட வேண்டும்.
கட்டுமான, இடிபாடு கழிவுகளை உரிய இடத்திற்கு கொண்டு சேர்ப்பது, அவற்றிலிருந்து மறு பயன்பாடு, மறு பயனீடுக்கான பொருட்களை தயாரிப்பதில் தகுந்த தொழில்நுட்பங்களை புகுத்துவது போன்ற தொழில்நுட்பங்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறினர்.