தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கிடப்பில் போடப்பட்ட குழாய் பதிப்பு பணி 

கிடப்பில் போடப்பட்ட குழாய் பதிப்பு பணி 

கிடப்பில் போடப்பட்ட குழாய் பதிப்பு பணி 


ADDED : ஜூலை 16, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர், ஜூலை 17– 

பெரிச்சிபாளையம் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி பாதியில் நிற்கிறது. இதனால், அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

திருப்பூர் மாநகராட்சி, 56வது வார்டு பெரிச்சிபாளையம் பிரிவிலிருந்து, பிரதான மேல்நிலைத் தொட்டி அமைந்துள்ள பகுதிக்குச் செல்லும் வகையில் ரோடு உள்ளது. அதில், மேல்நிலைத் தொட்டியிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் குழாய் பதிப்பு பணி துவங்கியது. இதற்காக, அந்த ரோட்டில் குழி தோண்டி குழாய் பதிக்கப்பட்டது. பல நாட்களாகியும் இந்த குழாய் பதிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. குழாய் பதிக்கும் பணியும் பாதியோடு நிறுத்தப்பட்டுக் கிடக்கிறது. இந்த ரோட்டில் குழி தோண்டப்பட்டு கிடப்பதால் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது. குழாய் பதிப்பு பணியும் நடக்காமல், தோண்டப்பட்ட குழியும் மூடப்படாமல் கிடப்பதால் அந்த ரோட்டைப் பயன்படுத்த முடியாத நிலை பல நாட்களாக உள்ளது. குழாய் பதிப்பு பணியை விரைந்து முடித்து, வாகனங்கள் செல்லும் வகையில், குழியை உடனேw மூட வேண்டும். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us