கிடப்பில் ரவுண்டானா திட்டம் வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு
கிடப்பில் ரவுண்டானா திட்டம் வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு
ADDED : ஜூலை 22, 2026 06:52 PM
உடுமலை: பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க, ரவுண்டானா கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
உடுமலை நகரத்தில், ரோட்டோரத்தில், தற்காலிக, நிரந்தர ஆக்கிரமிப்புகளால் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
முக்கிய ரோடுகளின் இருபுறங்களிலும் போதியளவு ‘பார்க்கிங்’ வசதி இல்லை. எனவே, தேசிய நெடுஞ்சாலையில், குறிப்பிட்ட அளவு, இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக, மாற்றப்படுகிறது.
நகரப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பட்டது. நகர எல்லையில் கொல்லம்பட்டரை பகுதியிலிருந்து கொழுமம் ரோடு சந்திப்பு வரை, தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தப்பட்டு, சென்டர்மீடியனும் அமைக்கப்பட்டது.
மேலும், திருப்பூர், தாராபுரம் ரோடு சந்திப்பிலும், பஸ் ஸ்டாண்ட் சந்திப்பில், ரவுண்டானா அமைப்பதற்கான திட்ட வரைவு அனைத்து துறை ஆலோசனைகள் பெறப்பட்டு, தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் செயல்படுத்தப்படாததால், வாகன ஓட்டுனர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
