ADDED : மே 23, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை - பாரப்பாளையத்தை சேர்ந்த சிறுவன் பார்த்திபன். இவருக்கு, விழித்திரை நரம்பு பாதித்திருந்தது. அதற்கு, ஐ பவுண்டேஷன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய, சக் ஷம் அமைப்பு ஏற்பாடு செய்தது. அதன்படி, ஆடிட்டர் சாரங்கராஜன் வாயிலாக, அறுவை சிகிச்சை செலவு ஏற்கப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பார்த்திபனுக்கு, 3,500 ரூபாய் மதிப்பிலான கண் கண்ணாடி நேற்று வழங்கப்பட்டது. சக் ஷம் அமைப்பு சார்பில், கால்நடை டாக்டர் மனோகர் ஏற்பாட்டில், கண் கண்ணாடி வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் ரத்தினசாமி, செயலாளர் தமிழ்செல்வம், தி ஐ பவுண்டேஷன் மருத்துவனை முகாம் ஒருங்கிணைப்பாளர் அஷ்வின் வழங்கினர்.