ADDED : ஆக 08, 2024 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாநில ஜூனியர் ஓபன் பிரிவு தடகள சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த மாதம், 5ம் தேதி துவங்கி, 7ம் தேதி வரை சென்னையில் நடந்தது.
இதில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தடை தாண்டும் ஓட்டப்பந்தய வீராங்கனை அஞ்சலி சில்வியா பங்கேற்ற நிலையில், முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு திருப்பூர் தடகள சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் சந்திரன் ஆகியோர், 20 ஆயிரம் ரூபாய்க்கான உதவித் தொகையை அவரது பெற்றோரிடம் வழங்கினர்.