/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அசுரவேக வாகனங்கள் அடிக்கடி விபத்துகள்
/
அசுரவேக வாகனங்கள் அடிக்கடி விபத்துகள்
ADDED : பிப் 25, 2025 06:59 AM

திருப்பூர்; தாமரைக்கோவில் அருகே, ரோட்டில் தேங்கியுள்ள மணலால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையம் அருகே உள்ள தாமரைக்கோவில் அருகே, குடியிருப்பு பகுதிகள் உள்ளன. குடியிருப்புகள், சாய ஆலைகள், சுத்திகரிப்பு நிலையங்கள், பனியன் நிறுவனங்கள் அதிக அளவு உள்ளன. அப்பகுதியில், ரோட்டின் வடபுறம் உள்ள குடியிருப்பு பகுதி மக்கள், ஊத்துக்குளி ரோட்டை கடந்து சென்றுவர வேண்டியுள்ளது.
அப்பகுதியில், ரோட்டோரம் அதிக அளவு, மணல் தேக்கமடைந்துள்ளது. ரோட்டில் வேகமாக செல்லும் டூ வீலர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. ரோட்டை கடந்து குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்லும் போது, வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது.
குறிப்பாக, ரோடு சந்திக்கும் பகுதியில், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அங்கு தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'ஏ.சி.எஸ்., மாடர்ன் சிட்டி, வெற்றிவேல் நகர் பகுதியில் வரும் வாகனங்கள், மெயின் ரோட்டுக்கு வரும் போது, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
போக்குவரத்து போலீசார் நேரில் ஆய்வு செய்து, விபத்து நடப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மெயின் ரோட்டில், வாகனங்கள் அதிவேகமாக சென்று வரும் பகுதியில், சிறிய வேகத்தடைகள் அமைக்க வேண்டும். முதல்கட்டமாக, நெடுஞ்சாலை ரோட்டின் இருபுறமும் தேங்கியுள்ள மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.