/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதிரியார் மீது நடவடிக்கை: ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
/
பாதிரியார் மீது நடவடிக்கை: ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
பாதிரியார் மீது நடவடிக்கை: ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
பாதிரியார் மீது நடவடிக்கை: ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
UPDATED : ஜூலை 03, 2024 06:43 AM
ADDED : ஜூலை 03, 2024 02:17 AM

திருப்பூர்:ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பாதிரியர்கள் முழுக்க, முழுக்க ஹிந்துக்களுக்கு விரோதமாக நடக்கின்றனர்; பேசுகின்றனர். கடந்த காலத்தில், ஜார்ஜ் பொன்னையா என்பவர், நாங்கள் போட்ட பிச்சை என்று, ஹிந்து மதம், பாரத மாதாவை இழிவுபடுத்தி பேசினார்.
தற்போது, கோவையில், சி.எஸ்.ஐ., பாதிரியார் ஒருவர் ஹிந்து மதம், வழிபாட்டை இழிவுபடுத்தி பேசியுள்ளார். பசுவை புனிதமாக நினைக்கிறோம். நாட்டின் விவசாயமே, மாட்டை நம்பி தான் உள்ளது. மாட்டை இழிவுபடுத்தி பேசியுள்ளார். இதற்கு தமிழக அரசு தான் காரணம்.
சில மாதங்களுக்கு முன், முருகன் குடிகொண்டுள்ள சென்னிமலையை கல்வாரி மலையாக மாற்ற வேண்டும் என்று கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் பேசினார். இவர்களின் நோக்கம் மதமாற்றம், நாட்டை கிறிஸ்துவ நாடாக மாற்ற முயற்சி செய்கின்றனர். ஹிந்து மதத்தை கிண்டலும், கேலியும் செய்கின்றனர்.
இந்த பாதிரியாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளரையும் கைது செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட பாதிரியார்களை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.