தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம் 

ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம் 

ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம் 


ADDED : ஜூலை 26, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, உடுமலையில், ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ராஜேஸ் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழக கோவில்களில் தரிசன கட்டணம் வசூல் செய்யும்படி, எந்த சட்டப்பிரிவும் இல்லை. தி.மு.க., அரசே இந்த கட்டண முறையை அமல்படுத்தியது.

எனவே, ஆலய தரிசன கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கோவில்கள் வாயிலாக, அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்தும், கட்டணத்தை ரத்து செய்யாமல் உள்ளனர்.

உடனடியாக அனைத்து கோவில்களிலும், தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. நிர்வாகிகள் ஹரி, வீரமணி, மணி, உதயகுமார், கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us