/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
/
ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 21, 2024 11:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அரசை கண்டித்து, பல்லடத்தில் ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொசவம்பாளையம் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன், சர்வேஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத் தலைவர்கள் ராஜ்குமார், சுப்பிரமணியம், செல்வம், சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹிந்து கோவில்களை சீரழிக்கும் அறநிலையத் துறையே கோவிலை விட்டு வெளியேறு என, கோஷங்கள் எழுப்பிய படி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர்கள் மதன், சிவசக்தி, கனகராஜ், சுரேஷ்குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.