/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெருங்கற்காலத்தை சேர்ந்த கற்திட்டை வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு
/
பெருங்கற்காலத்தை சேர்ந்த கற்திட்டை வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு
பெருங்கற்காலத்தை சேர்ந்த கற்திட்டை வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு
பெருங்கற்காலத்தை சேர்ந்த கற்திட்டை வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு
ADDED : ஆக 13, 2024 11:53 PM
உடுமலை:உடுமலை அருகே, மலைக்குன்றில் உள்ள பெருங்கற்காலத்தை சேர்ந்த, கற்திட்டையை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆய்வு செய்தனர்.
மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள, வரலாற்று சின்னங்கள் குறித்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.
அவ்வகையில், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த, தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி, கள ஆய்வாளர்கள் அருட்செல்வன், சிவகுமார் கொழுமம் பகுதியில் ஆய்வு செய்தனர். இதில், கொழுமத்திற்கும் ஆண்டிபட்டிக்கும் இடையில் உள்ள மலைக்குன்றில் பெருங்கற்காலத்தை சேர்ந்த கற்திட்டைகளை ஆய்வு செய்து, ஆவணப்படுத்தினர்.
குழுவினர் கூறுகையில், 'கொடைக்கானல் மலைப்பகுதிகளில் குறிப்பாக மன்னவனுார், கூக்கால் போன்ற பகுதிகளில் அதிகளவில் கற்திட்டைகள் உள்ளது. அதையொட்டி, கொழுமம் மலைக்குன்றில், சுமார் 15 அடிக்கும் மேல் ஒரே பாறைக்கல்லில் பெருங்கற்காலக் கற்திட்டை உள்ளது. இது அப்பகுதியின் தொன்மையான வரலாற்றுக்கு சான்றாக அமைந்துள்ளது,' என்றனர்.