/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாழை பராமரிப்பில் கூடுதல் கவனம் தோட்டக்கலைத்துறை அட்வைஸ்
/
வாழை பராமரிப்பில் கூடுதல் கவனம் தோட்டக்கலைத்துறை அட்வைஸ்
வாழை பராமரிப்பில் கூடுதல் கவனம் தோட்டக்கலைத்துறை அட்வைஸ்
வாழை பராமரிப்பில் கூடுதல் கவனம் தோட்டக்கலைத்துறை அட்வைஸ்
ADDED : மார் 06, 2025 09:49 PM
உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு பரவலாக வாழை சாகுபடி செய்யப்படுகிறது.
கோடை காலத்தில், வாழை பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துறையினர் கூறியதாவது:
கோடை காலத்தில், அதிக வெப்பம் காரணமாக, வாழை இலைகள் மற்றும் இலைக்காம்புகள் வெந்து கருகும் வாய்ப்புள்ளது. இலைகள் ஒடிந்து தொங்கி விடும்.
இதைத்தவிர்க்க, தோட்டத்தில், கிழக்கு மற்றும் மேற்காக உள்ள வரிசையை நீளமாகவும், வடக்கு மற்றும் தெற்காக உள்ள வரிசை குறுகியதாகவும், அமைத்துக்கொள்ள வேண்டும்.
இதனால், ஒரு வாழை மரத்தின் நிழல் அதிக அளவில் அடுத்துள்ள மரத்தைப் பாதுகாக்கும்.
கோடை காலத்தில், வாழையின் தண்டுப்பகுதி மண்ணுடன் சேரும் பகுதியில் உள்ள திசுக்களைச் சேதப்படுத்துகிறது. இந்த காயத்தின் வழியான 'எர்வினியா' பாக்டீரியா வாழை அழுகல் நோய் ஏற்படுகிறது.
இதைத்தவிர்க்க, மண்ணில் வாழைமரத்தின் தண்டைச் சுற்றி, மூடாக்கு அல்லது பசுந்தாள் உரமான சணப்பையை பயிர்செய்து மண்போர்வை அமைக்கலாம்.
மாலை நேரங்களில் தண்ணீர் பாய்ச்சினால்வேர்களுக்குச் சேதம் ஏற்படாது. கடுமையான வெயில் காலங்களில், தாரின் வளைந்த மேற்பகுதி பாதிக்கப்படுகிறது.
இதன் வாயிலாக நோயை உண்டாக்கும், ஒரு சில பூஞ்சை காளான் அல்லது பாக்டீரியாக்கள் தாக்கும் வாய்ப்புள்ளது. இதனால், காய்களின் வளர்ச்சி தடைபட்டு, மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
மேலும், காய்கள் முழுமையாக முதிர்ச்சி அடையாமல், காய்கள் பழுக்க ஆரம்பிக்கும். அப்போது அதிக வெப்பத்தால், தோலிலிருந்து அதிக அளவு நீர்ச்சத்து வெளியேறி, தோல்பகுதியில் வெடிப்புகள் தோன்றும்.
இத்தகைய பிரச்னைகளை தவிர்க்க, மரத்திலுள்ள, பாளையைக் கொண்டும், காய்ந்த இலைசருகுகளைக் கொண்டும், வெயில் தாக்காதவாறு மூட வேண்டும்.
இவ்வாறு, அத்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.