/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர் நிலைக்குள் வீடுகள்; மழைநீரில் மூழ்கும் அபாயம்?
/
நீர் நிலைக்குள் வீடுகள்; மழைநீரில் மூழ்கும் அபாயம்?
நீர் நிலைக்குள் வீடுகள்; மழைநீரில் மூழ்கும் அபாயம்?
நீர் நிலைக்குள் வீடுகள்; மழைநீரில் மூழ்கும் அபாயம்?
ADDED : மே 28, 2024 12:38 AM

பல்லடம்;பல்லடம், அண்ணா நகரில், நீர் நிலைக்குள் அமைந்துள்ள வீடுகள் மழைநீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: அண்ணா நகர் குட்டை ஏறத்தாழ, 12 ஏக்கர் பரப்பளவு உள்ளது. காலப்போக்கில், குட்டை சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கப்பட்டும், முட்புதர்களாலும், கழிவுகள் குப்பை குவியலாலும் மூடப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் மழைநீர் உள்ளே புகுந்து ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை சூழ்கிறது.
இத்துடன், குப்பைகள் கழிவுகள் அனைத்தும் மழைநீரில் அடித்து வரப்பட்டு நீரில் மிதக்கின்றன. குட்டைக்குள் உள்ள பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்புகளுக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
குட்டைக்குள் வீடுகள் கட்டி ஆக்கிரமித்து இருப்பதாலும், குப்பைகள் கழிவுகள் கொட்டும் இடமாக குட்டை உள்ளதாலும், மழைநீர் சேகரிக்க இயலாது.
நீர் நிலைகளை ஆக்கிரமிக்க கூடாது என கோர்ட் உத்தரவிட்டும், அதிகாரிகள் இதை பின்பற்ற தவறி வருகின்றனர். எனவே, ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து குட்டையை மீட்க வேண்டும். குப்பைகள் கழிவுகளை அகற்றி, குட்டையை முழுமையாக துார்வார வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.