/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் முதலிடம் பெற்றது எப்படி?
/
திருப்பூர் முதலிடம் பெற்றது எப்படி?
ADDED : மே 06, 2024 11:33 PM
திருப்பூர்:பிளஸ் 2 தேர்ச்சியில், ஈரோடு, சிவகங்கை மாவட்டங்களை விட, 0.03 சதவீதம் கூடுதலாக பெற்றதால், திருப்பூர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது.
கடந்த, 2023ம் ஆண்டு, 97.79 தேர்ச்சி சதவீதம் பெற்று மாநிலத்தில் இரண்டாமிடம் பெற்ற திருப்பூர், நடப்பாண்டு, 0.34 சதவீதம் குறைந்த தேர்ச்சி பெற்றாலும், 97.45 சதவீதத்துடன் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது.
அதே நேரம், கடந்த, 2013ம் ஆண்டு முதல், 96 சதவீதத்துக்கு கூடுதலாக தேர்ச்சி சதவீதம் பெறாத திருப்பூர், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, 97 சதவீத தேர்ச்சி சதவீதத்தை பெற்றுள்ளது. கடந்தாண்டு, 96.92 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்; நடப்பாண்டு மாணவர் தேர்ச்சி, 0.34 சதவீதம் குறைந்து, 96.58 சதவீதமாகியுள்ளது.
மாணவியர் கடந்தாண்டு, 98.52 சதவீதம் பெற்றனர். நடப்பாண்டு, 0.34 சதவீதம் குறைந்து, 98.18 சதவீதம் பெற்றுள்ளனர். பாடத்திட்ட அடிப்படையில் பார்த்தால், அதிகபட்சமாக மெட்ரிக் பள்ளிகள், 99.60 சதவீத தேர்ச்சி தந்துள்ளது. குறைந்த பட்சமாக, மாநகராட்சி பள்ளிகள், 95.03 தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளது.
கடும் போட்டியில் வென்ற திருப்பூர்
தேர்ச்சி முடிவுகளில் திருப்பூர், (97.45), சிவகங்கை, ஈரோடு (97.42), அரியலுார் (97.25) மாவட்டங்கள், 97 சதவீதத்துக்கு அதிகமான தேர்ச்சியை பெற்றுள்ளது.
சிவகங்கை, ஈரோடு மாவட்டம் இரண்டு ஒரே சதவீதம் பெற்றதால், இரண்டாமிடம் பகிர்ந்து வழங்கப்பட்டது. இவ்விரு மாவட்டங்களை விட, 0.03 சதவீத தேர்ச்சி கூடுதலாக பெற்றதால், திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை தட்டி துாக்கியது.