/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில் படிக்கட்டில் தவறி விழுந்து மனைவி கண் முன் கணவர் பலி
/
ரயில் படிக்கட்டில் தவறி விழுந்து மனைவி கண் முன் கணவர் பலி
ரயில் படிக்கட்டில் தவறி விழுந்து மனைவி கண் முன் கணவர் பலி
ரயில் படிக்கட்டில் தவறி விழுந்து மனைவி கண் முன் கணவர் பலி
ADDED : ஜூலை 04, 2024 05:22 AM
திருப்பூர்: ரயில் பெட்டி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த கணவர், மனைவி கண்முன்னே பலியாகினார். உடன் பயணித்த, ரயில் பயணிகள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
ஒடிசா, பாலங்கீர் பகுதியை சேர்ந்தவர் பினோத் நாயக், 44. திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். சொந்த மாநிலம் சென்று விட்டு, தனது மனைவி, குழந்தைகளுடன், நேற்று முன்தினம் மங்களூரு எக்ஸ்பிரஸில் திருப்பூர் திரும்பிக் கொண்டிருந்தார்.
ரயிலின் பொது பெட்டி கூட்டமாக இருந்தது; திருப்பூர் வந்தவுடன் ரயிலை விட்டு உடைமை, குடும்பத்தினர் உடனே இறங்கும் நோக்கில் தயாரான அவர், ரயில் பெட்டி படிக்கட்டு அருகே வந்து நின்றார். விஜயமங்கலம் - ஊத்துக்குளி இடையே ரயில் வந்த போது, எதிர்பாராத விதமாக, படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். கணவர் ரயிலில் இருந்து தவறி விழுந்ததால், பதறிய மனைவி, சக பயணிகளிடம் கூறி, அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளார்.
ரயிலை விட்டு இறங்கிய அவர், படுகாயமடைந்த கணவர் நிகழ்விடத்திலேயே இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந் தார். மனைவி கண் முன்னே கணவர் பரிதா பமாக இறந்ததால், சக பயணிகளும் சோக மடைந்தனர்.