/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஜொள்ளு' ஆபீசரின் 'லொள்ளு' தாங்க முடியலே... கலெக்டர் பேரச் சொல்லி 'நல்லா' கட்டுறாங்க 'கல்லா'
/
'ஜொள்ளு' ஆபீசரின் 'லொள்ளு' தாங்க முடியலே... கலெக்டர் பேரச் சொல்லி 'நல்லா' கட்டுறாங்க 'கல்லா'
'ஜொள்ளு' ஆபீசரின் 'லொள்ளு' தாங்க முடியலே... கலெக்டர் பேரச் சொல்லி 'நல்லா' கட்டுறாங்க 'கல்லா'
'ஜொள்ளு' ஆபீசரின் 'லொள்ளு' தாங்க முடியலே... கலெக்டர் பேரச் சொல்லி 'நல்லா' கட்டுறாங்க 'கல்லா'
ADDED : ஜூலை 02, 2024 01:36 AM
'ஜொள்ளு' ஆபீசரின் 'லொள்ளு' தாங்க முடியலே...
கலெக்டர் பேரச் சொல்லி 'நல்லா' கட்டுறாங்க 'கல்லா'
''எல்லா பக்கமும் மழை பெய்யுது; நம்ம ஊருக்கு மட்டும் வர மாட்டேங்குதே...'' என, வியர்வையை துடைத்த படியே, சித்ரா வீட்டு ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தாள் மித்ரா.
டீபாய் மீதிருந்த செய்தித்தாளை புரட்ட, 'உடு மலையில், சாராயம் குடித்த இருவர் மருத்துவமனையில் 'அட்மிட்' என்ற செய்தி கண்ணில்பட்டது.
''அக்கா, உடுமலை கள்ளச்சாராய மேட்டரில், திருப்பூர் போலீசுக்கு ரொம்ப கெட்ட பேரு ஆயிடுச்சாம். விவகாரம் சம்மந்தமா கவனிக்கிற பெரிய ஆபசர்கிட்ட விளக்கம் கேட்கலாம்ன்னு கூப்பிட்டா, 'ரெஸ்பான்ஸ்' பண்றதே இல்லையாம். பூசி மெழுகத்தான் பார்க்கிறாங்களே தவிர, உள்ளதை உள்ளபடி சொல்ல மாட்டேங்கறாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''ஒரு பொய்யை மறைக்க நுாறு பொய் சொல்ல வேண்டியிருக்கும்; அதுக்கு உண்மையை சொல்லிட்டா, நல்ல பேராவது கிடைக்கும்'' என ஆதங்கப்பட்டாள் சித்ரா.
''பூண்டி நகராட்சியில குடிநீர் குழாய் இணைப்புக்கு, 12 ஆயிரம் வசூலிக்கிறாங்களாம். ரசீதும் கொடுத்திடறாங்களாம். ஆனா, குடிநீர் குழாய், ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம், வீட்டின் உரிமையாளர் தான் வாங்கித்தரணுமாம். அதுமட்டுமின்றி, குழி தேண்டி, குழாய் பதிக்கிற வேலையை செய்றவங் களுக்கு தனியா, 2 ஆயிரம், 3 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கணும்ன்னு சொல்றாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''நகராட்சி ஆபீசர் தான் இத கவனிக்கனும்'' என்ற சித்ரா, ''திருப்பூர், மும்மூர்த்தி நகர்ல, வீடுகளுக்கு முன்னாடி கழிவுநீர் கால்வாய் கட்டியிருக்காங்க. இதுக்காக அங்க இருக்கற மக்கள்கிட்ட, வார்டு வி.ஐ.பி., 10 ஆயிரம், 20 ஆயிரம்னு வசூல் பண்றாராம். கொடுக்கலைன்னா, திரும்பவும் கழிவுநீர் கால்வாயை மூடிடுவோம்ன்னு சொல்றாங்களாம்,'' என்றாள்.
''ஒரு வேளை 'நமக்கு நாமே திட்டத்துல' அந்த வேலையை செய்திருப்பாங்களோ என்னவோ? கார்ப்பரேஷன் ஆபீசர் விசாரிச்சு உண்மையை சொல்லணும்!,'' என்றாள் மித்ரா.
கலெக்டர் பெயரில் 'கல்லா!'
''திருப்பூர் வடக்கு பார்த்த தாலுகாவில், துணை பொறுப்புல இருக்கற ஒரு ஆபீசர், துறை சம்மந்தப்பட்ட வேலையா சென்னைக்கு போனாக்கூட, அவர் கையெழுத்துப் போட்டு தர்ற வேண்டிய 'சர்டிபிகேட்'களை, அவரோட ஆபீஸ்ல வேலை செய்ற இன்னொருத்தர் கொடுத்திடறாராம்,'' என்றாள் சித்ரா.
''இதுல என்ன பிரச்னை,'' குழப்பத்துடன் சித்ரா பார்க்க, ''புரோக்கர்ங்க மூலமா வர்ற விண்ணப்பங்களுக்கு தான் முன்னுரிமை தர்றாங்களாம்,'' என விஷயத்தை சொன்னாள் மித்ரா.
''ஓ...இதுதான் விஷயமா'' என 'உச்' கொட்டிய சித்ரா,''அங்கேயாச்சும் பரவாயில்ல. காளைக்கு புகழ் பெற்ற ஊரிலுள்ள தாலுகா ஆபீசில் பெரிய ஆபீசர் ஒருத்தரு, கமிஷன் இல்லாம எந்த வேலையும் செய்றது இல்லையாம். தரிசு நில வகை மாற்ற சான்றிதழுக்கு, 2 லட்சம், வாரிசு சான்றிதழுக்கு, 50 ஆயிரம்னு, 'அமவுன்ட் பிக்ஸ்' பண்ணி அள்ளிக் குவிக்கிறாராம்,''
''வில்லேஜ்'ல உதவி யாளரா இருக்கற ரெண்டு பேரு தான், அவரோட வசூல் ராஜ்ஜியத்துல வலதும், இடதுமா இருந்து 'ெஹல்ப்' பண்றாங்களாம். ஏன், இப்படி பண்றீங்கன்னு கேட்டா, ''என்னோட அண்ணன் கலெக்டர். மாவட்ட வி.ஐ.பி.,க்கும் அவரு 'ப்ரெண்டு' தான்; என்னை யாரும் எதுவும், செய்ய முடியாதுன்னு ஆபீசர் கொக்கரிக்கிறாராம்,'' என்றாள் சித்ரா.
''அடேங்கப்பா பெரிய ஆள் தான் போல...'' சிரித்த மித்ரா, ''அக்கா, அதே ஆபீசர் தான், அதே துறையிலுள்ள ஒரு லேடிக்கு 'வாட்ஸ்அப்'பில் 'ஜொள்ளு' மெசேஜ் அனுப்பி, பேமஸ் ஆயிட்டார்,'' என்று சொல்லி விட்டு, ''அக்கா பக்கத்துல இருக்க தாராபுரம் ரெவின்யூவில், கொஞ்சம் நாள் முன்னாடி 'டிரான்ஸ்பர்' போட்டிருக்காங்க. அங்க வேலை பார்த்த ரெண்டு பேரு, வேறு 'போஸ்டிங்'கில், அதே ஆபீசுக்கு திரும்பவும் வந்துட்டாங்களாம். அவங்க மேல ஏற்கனவே நிறைய, 'கரெப்ஷன்' புகார் இருக்காம். ஆனா, அதே ஆபீசில இருந்த நேர்மையான ஒரு அதிகாரியை ஊத்துக்குளிக்கு துாக்கியடிச்சுட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''டிரான்ஸ்பர்ல கூட பணம் விளையாடுதுன்னு, ஒரே பேச்சு. ஒவ்வொரு வாரமும் கலெக்டர் ஆபீசில மக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்குது; இதுல, பல்வேறு பிரச்னை தொடர்பா மனு கொடுக்க மக்கள் வர்றாங்க. ஏழை, எளிய மக்களுக்கு விண்ணப்பம் எழுதி தர்றதுக்குன்னே நிறையே பேரு வரிசையா உட்கார்ந் திருப்பாங்க,''
''இந்த, 'வழிகாட்டி'கள் வரிசையில இருக்கற ஒரு அமைப்பைச் சேர்ந்தவங்க, மக்களோட பிரச்னைகளை தங்களோட 'லெட்டர் பேடு'ல எழுதி கொடுத்து விடறாங்களாம். அதே அமைப்பினர், அப்பப்போ, மாவட்ட நிர்வாகத்தை கண்டிச்சு ஆர்ப்பாட்டமும் பண்ணுவாங்களாம். இப்படியெல்லாம் 'பிரைவேட் ஆர்கனைசேஷன்' பேர்ல எல்லாம் 'பெட்டிஷன்' கொடுக்கக் கூடாது; பொதுமக்கள் தங்களோட பேர்ல தான், பெட்டிஷன் கொடுக்கணும்ன்னு, ஏற்கனவே, ஒரு கலெக்டர் 'அட்வைஸ்' பண்ணியிருந்தாராம்,'' என்றாள் சித்ரா.
நிராசையான 'பார்' ஆசை!
''ஆளுங்கட்சி சார்பு அணியை சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஒருத்தரு, மதுக்கடை 'பார்' லைசென்ஸ் வாங்கித் தர்றதாவும், தினமும் நிறைய வருமானம் பார்க்கலாம்ன்னு சொல்லி, ஆறு பேர்கிட்ட, 10 லட்சம் ரூபாய் வசூல் பண்ணியிருக்காரு. மினிஸ்டர்ஸ், கட்சி வி.ஐ.பி.,ஸ் பக்கத்துல அவர் நிற்கிற 'போட்டோ'வை காண்பிச்சு, கட்சியில தனக்கு செல்வாக்கு இருக்கிறதா, 'பில்ட் அப்' வேற கொடுத் திருக்காரு,''
''ஆனா, காசு கொடுத்தவங்களுக்கு 'பாரும்' கிடைக்கலையாம்; காசும் கிடைக்கலையாம். விசாரிச்சு பார்த்தப்போ, இந்த மாதிரி நிறைய பேர்க்கிட்ட இருந்து, 2 கோடி ரூபாய் வரை வசூல் பண்ணியிருக்காருங்கற விஷயம் தெரிய வர, கட்சி ஆபீஸ்ல பஞ்சாயத்து கூடிடுச்சாம். கைகலப்பு வரை விவகாரம் போயிடுச்சாம். 'தங்கம்'ன்னு நம்பினோம்; ஆனா, 'தகரம்'ன்னு நிரூபிச்சிட்டியே 'ராஜா'ன்னு, புலம்பிட்டே போயிருக்காங்க பணத்தை பறி கொடுத்தவங்க'' என விளக்கினாள் மித்ரா.
''பாருன்னு சொல்லவும் தான் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது'' என்ற மித்ரா,''கொஞ்சம் நாள் முன்னாடி, அவிநாசி - சேவூர் ரோட்ல, பட்டறை பஸ் ஸ்டாப் பக்கத்துல இருக்கற, 'பா'ர்ல, மது அருந்த வந்தவங்களை, ஊழியருங்க அடிச்சு, பெரிய ரகளையே நடந்திருக்கு. இத தெரிஞ்சுகிட்ட ஒருத்தரு, விசாரிக்க போயிருக்காரு,''
''கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையா, 'பாருக்கு பின்னாடி, 'ெஷட்' அடிச்சு,24 மணி நேரமும் சரக்கு விக்கிற விஷயம் தெரிய வந்திருக்கு. இந்த விவகாரத்தை போலீசுக்கு தகவல் சொல்ல, அங்க போன போலீஸ்காரங்க, 'இதெல்லாம் சகஜம்; எல்லா பக்கமும் நடக்கிறது தான்; உங்களுக்கு வேணும்னா ஒரு பாட்டில் வாங்கிட்டு போங்க'ன்னு 'கூலா' சொல்லியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
''டாஸ்மாக் பார்கள்ல தான், 24 மணி நேரமும் சரக்கு விக்கிறாங்கன்னா, ஸ்டார் அந்தஸ்துபெற்ற 'பார்'லயுமா இப்படி...?'' என, நொந்து கொண்டாள் மித்ரா.
'கவரேஜா'... கள்ளா!
''இதனால தான், 'கள்ளுக்கடை' திறக்கணும்ன்னு, விவசாயிகள் போராடுறாங்க. நாலு நாளைக்கு முன்னாடி, விவசாயிங்க, 4,5 பாட்டில்ல கள் நிரப்பி, கலெக்டர் ஆபீஸ் முன்னால வச்சு ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்காங்க. நியூஸ் கவரேஜ்க்கு போன, லோக்கல் சேனல் ரிப்போர்ட்டர் ஒருத்தரு, ஒரு கள் பாட்டிலை எடுத்துட்டு போய், எஸ்.பி., ஆபீஸ் எதிர்ல இருந்த சந்துல நின்னு, குடிச்சிருக்காரு,''
''சைட் டிஷ்க்கு', அங்க இருக்கற கேன்டின்ல வடையும் வாங்கிட்டு போயிருக்காரு. இத பார்த்த, விவசாயிங்க, நாங்களாவது கள் பாட்டிலை வைச்சு போராடு றோம். செய்தி சேகரிக்க வந்தவரு, கள் குடிச்சு எங்களுக்கு 'சப்போர்ட்' பண்ணியிருக்காருன்னு சொல்லி சிரிச்சாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''அக்கா, அவிநாசியில, மடத்துப்பாளையம் - பண்ணாரியம்மன் கோவில் முன்னாடி, ைஹவேஸ் மூலமா, ரோடு விரிவாக்கம் செஞ்சி, ரவுண்டானா கட்றாங்க. ஒரு பக்கம் இருக்கற ஆக்கிரமிப்புகளை எடுத்துட்டாங்களாம்; ஆனா, மறுபக்கம் எடுக்கலையாம். 'இப்படியெல்லாம் அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது'ன்னு 'பப்ளிக்' பேச ஆரம்பிச்சுட்டாங்களாம்,. இதபத்தி, கவுன்சிலர்கள், கலெக்டர்கிட்ட 'பெட்டிஷன்' கொடுக்கப் போறாங்களாம்,'' என்றாள்.
''சரிக்கா, கிளம்பறேன். மழை வர்ற மாதிரி இருக்கு'' என மித்ரா புறப்பட்டாள்.