/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலையரங்கம் கட்டினால் கடைவீதி தப்பிக்கும்
/
கலையரங்கம் கட்டினால் கடைவீதி தப்பிக்கும்
ADDED : ஆக 06, 2024 06:44 AM
பல்லடம்: பல்லடத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடமாக கடைவீதி உள்ளது.
வாரச்சந்தை நடக்கும் திங்களன்று, கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதற்கிடையே, பொதுக்கூட்டம், ஊர்வலம், பிரசாரம் என, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், இவை நெரிசல் மிகுந்த கடைவீதியில்தான் நடத்தப்படுகிறது. கலையரங்கம் என்ற ஒன்று இல்லாதது நகராட்சி பகுதியில் பெரும் குறையாக இருந்து வருகிறது.
நகராட்சி பகுதியில் கலையரங்கம் அமைக்கப்பட்டால், கட்சி பொதுக் கூட்டம், கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள் உட்பட அனைத்தையும் நடத்தலாம். மேலும், கடை வீதியில் ஏற்பட்டு வரும் நெரிசலுக்கு இடையே இது போன்ற நிகழ்ச்சிகள் நடப்பதை தவிர்க்க இயலும்.
வாடகையும் கிடைக்கும் என்பதால், நகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். பொதுமக்கள் நலன் கருதியும், நகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பதாலும், பல்லடத்தில் கலையரங்கம் கட்ட நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.