ADDED : ஜூலை 22, 2024 10:41 PM

அ நிறம் | அளவு
திருப்பூர்:தேசிய கொடி தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு- - 2 சார்பில், கல்லுாரி வளாகத்தின் முன், மூவர்ணக் கொடியை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -- 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
மாணவச் செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, தாமேதரன், திவாகர், நவீன்குமார் ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேசிய கொடியை கரங்களில் ஏந்தியும், முகத்தில் மூவர்ணங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். என்.எஸ்.எஸ்., ஆலோசகர் சுந்தரம் நன்றி கூறினார். பேராசிரியர்கள் விநாயகமூர்த்தி, முருகானந்தம், ராஜா, ராதாகிருஷ்ணன், தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
