/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கழிவுகள் கொட்டிய வாகனம் சிறைபிடிப்பு
/
கழிவுகள் கொட்டிய வாகனம் சிறைபிடிப்பு
ADDED : ஏப் 22, 2024 12:52 AM
திருப்பூர்:மூலனுார் அருகே கழிவுகள் கொட்ட வந்த வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்தவர் தினேஷ், 26. நேற்று முன்தினம் கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து, நான்கு டன் கழிவுகளை (துணி, பிளாஸ்டிக் கவர், செருப்பு) வாகனத்தில் ஏற்றி கொண்டு நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் உள்ள சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அளவுக்கு அதிகமாக இருந்த கழிவுகளை, மூலனுார் - கரூர் ரோட்டில் நாச்சிபாளையத்தில் ரோட்டோரம் கொட்ட முடிவு செய்து வாகனத்தை நிறுத்தினார். குப்பையை கொட்டும் போது, அப்பகுதி கிராம மக்கள், வாகனத்தை சிறைபிடித்தனர்.
மூலனுார் போலீசார், நகராட்சியில் இருந்து பணியாளர்கள் சென்றனர். குப்பையை கொட்டியது தொடர்பாக அபராதத்தை கட்டியபின் வாகனத்தை எடுத்து செல்ல அறிவுறுத்தினர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

