/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சட்டசபை தொகுதியில் எம்.பி.., அலுவலகம் பா.ஜ,, வாக்குறுதிக்கு வரவேற்பு

ADDED : ஏப் 07, 2024 12:22 AM
பல்லடம்;ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், எம்.பி., அலுவலகம் அமைக்கப்படும் என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அளித்த வாக்குறுதி வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுகிறார். ஓட்டுகளை கவர அனைத்து கட்சிகளும் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், எம்.பி., அலுவலகம் அமைக்கப்படும் என, அண்ணாமலை உறுதி அளித்துள்ளார்.
வழக்கமாக, ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் எம்.எல்.ஏ., அலுவலகங்கள் மட்டுமே இருக்கும். இதற்கு மாறாக, மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில், சட்டசபை தொகுதிகளில் எம்.பி., அலுவலகம் அமைக்கப்படும் என அண்ணாமலை கூறியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
இதேபோல், ஆனைமலை- நல்லாறு திட்டம், கூடுதல் மக்கள் மருந்தகம், கிராமங்கள்தோறும் விளையாட்டு மைதானம், விசைத்தறி பிரச்னைக்கு தீர்வு உள்ளிட்ட வாக்குறுதிகள், விவசாயிகள், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.