/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மிஆ தனிஷ்க்'ஷோரூம் திறப்பு விழா
/
'மிஆ தனிஷ்க்'ஷோரூம் திறப்பு விழா
ADDED : மே 03, 2024 01:29 AM

திருப்பூர்:திருப்பூர் பி.என்., ரோட்டில், 'மிஆ தனிஷ்க்' புதிய நகை விற்பனை ஷோரூம் திறப்பு விழா நேற்று நடந்தது.
திருப்பூர் ேஷாரூமின் வர்த்தக கூட்டு பங்குதாரர்கள் வரவேற்றனர். 'மிஆ தனிஷ்க்' வணிக பிரிவு தலைவர் சியாமளா ரமணன், புதிய ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். குத்து விளக்கேற்றி, முதல் விற்பனையை அவர் துவக்கி வைத்தார்.
அவர் கூறியதாவது: நவீன டிசைன்களிலான நவீன மற்றும் சமகால 14 மற்றும் 18 காரட் மதிப்பிலான நகைகள் இங்குள்ளன. அக் ஷய திரிதியை விற்பனை துவக்கமாக இக்கிளை துவங்கப்பட்டுள்ளது. இதையொட்டி திறப்பு விழா சலுகையாக 20சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப் படுகிறது.
நேர்த்தியான டிசைன்களில் கம்மல், தோடு, மோதிரம், வளையல், பதக்கங்கள், கழுத்தணிகள், தாலி ஆகியன உள்ளது. பழைய தங்கத்துக்குப் பதிலாக புது நகைகள் வழங்கும் தங்கப் பரிமாற்றம் திட்டம் உள்ளது. 5 ஆயிரம் விலையிலிருந்து 25,000 ரூபாய்க்கும் மேற்பட்ட டிசைன்கள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.