/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனியன் கழிவுக்கு தீவைப்பு மக்களுக்கு சுவாசப் பிரச்னை
/
பனியன் கழிவுக்கு தீவைப்பு மக்களுக்கு சுவாசப் பிரச்னை
பனியன் கழிவுக்கு தீவைப்பு மக்களுக்கு சுவாசப் பிரச்னை
பனியன் கழிவுக்கு தீவைப்பு மக்களுக்கு சுவாசப் பிரச்னை
ADDED : மே 10, 2024 11:51 PM

அவிநாசி;அவிநாசி - சேவூர் ரோட்டில் 1வது வார்டுக்குட்பட்ட பழனியப்பா பெட்ரோல் பங்க் அருகில் ஆடை ஏற்றுமதி சார்ந்த ஜாப் ஒர்க் ஆர்டர் செய்யும் கம்பெனிகள் அதிக அளவில் உள்ளன.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர். கம்பெனிகளில் இருந்து வெளியே கொட்டப்படும் கழிவுகள் மலை போல ஸ்ரீராம் நகர் எக்ஸ்டென்ஷன் வீதி செல்லும் வழியில் குவிக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை மலைக்கு ஓரிரு நாட்கள் மர்ம நபர்கள் தீ வைத்து சென்று விடுகின்றனர்.
அதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வசிப்போருக்கு சுவாச பிரச்னை, இருமல், அலர்ஜி போன்றவை ஏற்படுவதாக அப்பகுதியில் வசிப்பவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 'கம்பெனியில் பணிபுரியும் தொழிலாளர்கள் சாப்பிட்டு விட்டு மீதமாகும் சாப்பாட்டுக் கழிவுகளையும், குப்பைகளுடன் வெளியில் கொட்டிச் செல்வதால் அப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது,' என்கின்றனர்.
அப்பகுதியில் உள்ள ஆடை ஏற்றுமதி கம்பெனிகள் மூலம் குப்பை கொட்டும் பகுதியில், அவிநாசி பேரூராட்சி நிர்வாகம் மக்கும் குப்பை - மக்காத குப்பை என தரம் பிரித்து வைக்க குப்பை தொட்டி வைத்து சுகாதார சீர்கேடு ஏற்படாமல் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.