/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயணிகள் முன்பதிவு அதிகரிப்பு சம்பல்பூர் ரயில் இயக்கம் நீட்டிப்பு
/
பயணிகள் முன்பதிவு அதிகரிப்பு சம்பல்பூர் ரயில் இயக்கம் நீட்டிப்பு
பயணிகள் முன்பதிவு அதிகரிப்பு சம்பல்பூர் ரயில் இயக்கம் நீட்டிப்பு
பயணிகள் முன்பதிவு அதிகரிப்பு சம்பல்பூர் ரயில் இயக்கம் நீட்டிப்பு
ADDED : மார் 08, 2025 11:10 PM
திருப்பூர்: ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகம் வருவோர், இங்கிருந்து வர்த்தகம் செய்ய செல்லும் பயணிகளால் சிறப்பு ரயிலில் டிக்கெட் முன்பதிவு அதிகரித்ததையடுத்து, ஈரோடு - சம்பல்பூர் ரயில் இயக்கம் மே முதல் வாரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ளது,சம்பல்பூர் மாவட்டம், மாநகராட்சியாகவும் உள்ளது. கோவை, திருப்பூர் வழியாக இயக்கப்படும் டாடாநகர், தன்பாத் ரயில் மட்டும் சம்பல்பூர் ஜங்ஷனில் நின்று பயணித்தது. ரயில் பயணிகள் வசதிக்காக ஈரோட்டில் இருந்து சம்பல்பூருக்கு வெள்ளிதோறும் வாராந்திர சிறப்பு ரயிலை, கடந்த ஆண்டு, தெற்கு ரயில்வே அறிவித்தது.
இருபது பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில், ஏ.சி., மற்றும் முன்பதிவு இருக்கை உட்பட 1,100 க்கும் மேற்பட்ட இருக்கைகள் தொடர்ந்து முன்பதிவாகி, ரயில் 'ஹவுஸ்புல்'லாகவே உள்ளது. இதனையடுத்து, ஈரோடு - சம்பல்பூர் சிறப்பு ரயில் (எண்:08312) இயக்கம் மார்ச், 14 முதல், மே, 2 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கமாக சம்பல்பூரில் இருந்து புறப்படும் ரயில் மார்ச், 11 துவங்கி, ஏப்ரல், 30 ம் தேதி வரை புதன்தோறும் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நாக்பூர் - சூரத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாகவும் சம்பல்பூர் உள்ளது. நாட்டின் கைத்தறி மற்றும் ஜவுளி நகரங்களில் முக்கியமான சம்பல்பூரில் இருந்து, உற்பத்தி செய்யப்படும் பட்டு மற்றும் கைத்தறி சேலை நாடு முழுவதும் அனுப்பபடுகிறது.
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனங்களில் ஒன்றான, மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் இங்குள்ளது. எனவே, தென்மாநிலங்கள் மற்றும் மேற்கு மண்டலத்துடன் இந்நகரை இணைக்க சிறப்பு ரயில் இயக்கத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.