தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கறிக்கோழிகளுக்கு தண்ணீர் தேவை அதிகரிப்பு

கறிக்கோழிகளுக்கு தண்ணீர் தேவை அதிகரிப்பு

கறிக்கோழிகளுக்கு தண்ணீர் தேவை அதிகரிப்பு


ADDED : மார் 22, 2024 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2024 10:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லடம்;கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, கறிக்கோழிகளின் தண்ணீர் தேவை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

இது குறித்து கறிக்கோழி பண்ணையாளர்கள் சிலர் கூறியதாவது:

கோடையில், 30 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருப்பதால், கறிக்கோழிகள் பாதிக்கப்படுகின்றன கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து கறிக்கோழிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மின் விசிறி அமைத்தல், ஸ்பிரிங்லர் முறையில் தண்ணீர் தெளிப்பது, மேற்கூரைகளில் தென்னங்கீற்றுகளை பரப்பி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறது.

கோடை காலத்தில், கோழிகளுக்கு தீவனங்களை குறைத்து, தண்ணீர் அதிகம் வழங்கப்படும். சாதாரண நாட்களில், கோழி ஒன்று, 3.50 கிலோ தீவனமும், 10 லிட்., தண்ணீர் எடுத்துக் கொள்ளும், கோடை காலத்தில், 15 லிட்., தண்ணீர் எடுக்கும்.

இதுதவிர, கோடையில், 5 ஆயிரம் கோழிகள் கொண்ட ஒரு பண்ணைக்கு, 600 லிட்., தண்ணீர் கூடுதலாக வேண்டும். கோடை வெப்பம் காரணமாக கோழிகள் இறக்கும் அபாயம் உள்ளதால், மேற்கூறிய நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே கோழிகளை காப்பாற்ற முடியும். கோடை காலத்தில், கோழிகளை பரா மரிக்க கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளால், கோடையில், மின் பயன்பாடும் இரட்டிப்பாக அதிகரிக்கிறது. இதனால், கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us